வியட்நாம் Vietnam
வியட்நாம் Vietnam
பிரிட்டன் - பிரான்ஸ் இவிங்க ரெண்டு பேரும் சுதந்திர கொடுத்த தேசங்கள் உருப்பட்டதா பெரியவில் சரித்திரம் இல்லை. இந்தியா - பாக்கிஸ்தான் லடாய் , பாலஸ்தீன் - ஆக்கிரமிப்பு தேச போர் , வறுமையில் தள்ளாடும் ஆபிரிக்க தேசங்கள் என்று பட்டியல் நீள்கிறது. அதே போல பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெற்ற உடனே பத்திக்கொண்ட ஒரு சம்பவம் உண்டு. அது தான் வியட்நாம் சுதந்திர போர்!
நியாயமா பார்த்தா வியட்நாம் சுதந்திரமடைந்த போது அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்திருக்க வேண்டும்! விடுமா அமெரிக்கா! ஆடியது ஒரு ருத்ர தாண்டவம்! நீ ஆடினா நா சும்மா இருப்பேனா என்று குருட்சேவ் கணக்கு போட்டார்! விளைவு 20 ஆண்டுகால யுத்தம்! 58,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்தனர்… 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட வியட்நாமியர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தனர்… இறுதியில், வென்றது யார்?
80 , 90 களில் வந்து பெரும்பாலான ஹாலிவுட் படங்களில் வியட்நாம் ரெபெரன்ஸ் தான் அதிகமா இருக்கும். ஏன் Kong Skull Island இன் ஆரம்ப காட்சிகள் கூட அமெரிக்கா - சோவியத் லடாய் (வியட்நாம்) பற்றிய காட்சிகள் தான் இருக்கும். அமெரிக்க வரலாற்றில் படுதோல்வியில் முடிந்த ஒரு படையெடுப்பு! ஐசனோவர் - கென்னடி - ஜான்ஸன் என்று பல அதிபர்கள் வந்தும் போரை நிறுத்த முடியவில்லை!
Lbj lbj how many kids did you kill today என்று ஜனாதிபதி ஜான்ஸனை பார்த்து அமெரிக்கர்களே பாட ஆரம்பித்துவிட்டார்கள்! வியட்நாம் பூர்வகுடிகளின் உண்மையான அபிலாஷைகளை அறியாது அமெரிக்கா ஆடிய தாண்டவத்தில் மூன்று தேசங்கள் ஆம் அமெரிக்கா - சோவியத் - வியட்நாம் கொடுத்த விளை அதிகம். கம்யூனிசம் மீதான அதீத வெறுப்பு ஒன்றே அமெரிக்காவை நிலைகுலைய செய்தது எனலாம்.
ஆனால் சுதந்திர தாகம் மிக்க வியட்நாமியர்கள் முன் அமெரிக்காவாவது புடலங்காயாவது என்றாகி போனது டாலர் தேசம். ஹோ சீ மீன் என் பெயரை கேட்டாலே அமெரிக்கா வீரர்கள் நடுங்கி போன வரலாறு அது. அவர் தான் வியட்நாமின் தேசதந்தை! போரில் அமெரிக்கா ஜெயித்திருந்தால் கிழக்காசியாவின் வட கொரியா - தென் கொரியா வாக வியட்நாம் மாறியிருக்கும். ஆனால் தீரமிக்க வியட்நாமியர்கள் முன் அமெரிக்கா மண்டியிட்டது என்பது வரலாறு.
இந்த இடத்தில் அமெரிக்கா மண்ணை கவ்விய இன்னும் சில இடங்களை பார்த்தால் சுவாரசியமாக இருக்கும்.
1. அஃப்கானிஸ்தான் (2021) – 20 வருட வீண் முயற்சி: சுமார் 20 ஆண்டுகள், கோடிக்கணக்கான டாலர்கள் செலவு, ஆயிரக்கணக்கான உயிர்ப்பலி. எதற்காக? அங்கிருந்த ஆட்சியாளர்களை ஒழிப்போம் என்று சபாரியேறி வந்த அமெரிக்கப் படைகள், இறுதியில் இரவோடு இரவாக வெளியேறின. அவர்கள் வெளியேறிய வேகத்தில், எந்த தலிபான்களை விரட்டினார்களோ, அதே தலிபான்கள் மீண்டும் காபூலில் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். நவீன வரலாற்றில் அமெரிக்காவின் மிக மோசமான பின்வாங்கல் இது.
2. ஈரானியப் புரட்சி (1979) : மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியாகவும், செல்லப்பிள்ளையாகவும் இருந்தவர் ஈரானின் மன்னர் ஷா (Shah). ஆனால், மக்களுக்கு அவர் மீது வெறுப்பு இருந்தது. ஆயத்துல்லாஹ் கொமேனி தலைமையில் வெடித்த இஸ்லாமியப் புரட்சி, ஷாவின் ஆட்சியை மட்டுமல்ல, அவருக்குப் பின்னாலிருந்த அமெரிக்காவின் ஆதிக்கத்தையும் வேரோடு பிடுங்கி எறிந்தது. அமெரிக்கத் தூதரக அதிகாரிகளே பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது.
3. கியூபா (Bay of Pigs Invasion – 1961) – சி.ஐ.ஏ-வின் அவமானம்: அமெரிக்காவின் மூக்குக்குக் கீழே இருந்துகொண்டு கம்யூனிசம் பேசிய ஃபிடல் காஸ்ட்ரோவை எப்படியாவது ஒழித்துக் கட்டத் துடித்தது அமெரிக்கா. சி.ஐ.ஏ (CIA) பயிற்சி அளித்த கியூப அகதிகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட இந்த 'பே ஆஃப் பிக்ஸ்' படையெடுப்பு படுதோல்வியில் முடிந்தது. இது காஸ்ட்ரோவின் கரங்களை மேலும் பலப்படுத்தியதோடு, அதிபர் கென்னடிக்கு சர்வதேச அரங்கில் பெரும் அவமானத்தைத் தேடித் தந்தது.
எவ்வளவு பெரிய அதிநவீன ராணுவ பலம் இருந்தாலும், 'சுதந்திரம்' என்ற ஒற்றை வார்த்தையை சுவாசமாகக் கொண்ட மக்களை, எந்தப் பேரரசாலும் அடிமைப்படுத்த முடியாது என்பதற்கு வியட்நாமே சாட்சி. டாலரும், வெடிமருந்தும் உடல்களைத் துளைக்கலாம்; ஆனால் மண்ணுக்காக மார்தட்டும் மக்களின் மன உறுதியை துளைக்க முடியாது.
வரலாறு மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்தும் உண்மை என்னவென்றால் ஏகாதிபத்தியத்தின் ஆணவத்தை அடக்க, ஹோ சி மீன் போன்ற ஒரு எளிய தலைவனும், 'தாய்மண் காப்போம்' என்ற உறுதியும் போதும். அன்று வியட்நாமில் வீழ்ந்த வல்லாதிக்கத்தின் கொட்டம், ஆஃப்கான் வெனிஸுவெல , கிரீன்லாந்து வரை தொடர்கிறது. அடக்குமுறை இருக்கும் வரை, அதை எதிர்க்கும் குரல்களும் ஒலித்துக்கொண்டே இருக்கும்!
வல்லரசுகள் வீழ்வதும், சாமானியர்கள் வாழ்வதும் காலத்தின் கட்டாயம்!

Worst American
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்கு