ஆரியர்கள்
ஆரியர்கள்
கிட்டத்தட்ட கி.மு 2000 ஆண்டு வாக்கில் மத்திய
ஆசியாவிலிருந்து (அதாவது இன்றைய ஈரான் பகுதியில்) கைபர் கணவாய் வழியாக
இந்தியாவுக்குள் நுழைந்த ஒரு நாடோடி கூட்டம் தான் ஆரியர்கள்.
முதலில் ஆரியர் என்றால் யார்? எனப் பார்ப்போம். சிந்து வெளி
நாகரிக வீழ்ச்சிக்குச் சற்றுப் பின்னரான காலப் பகுதியில் கைபர் கணவாயினூடாக
கால்நடை மேய்ப்போராக நாவலந்தேயத்தினுள் (இன்றைய இந்தியப் பெரு நிலப் பரப்பு
/துணைக் கண்டம்) வந்து சேர்ந்தவர்களே ஆரியர்கள் ஆவார்கள். ஆரியர் என்ற சொல்
சமற்கிரத மற்றும் ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய ( arya )எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின்
முந்தைய நாகரிகம், அதாவது
வடமேற்கில் இருந்த சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தபின் ஆரியர்கள் இந்த
பகுதிக்கு வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த சிந்துவெளி
நாகரிகமானது, எகிப்திய
மற்றும் மெசோபோடாமிய நாகரிக காலகட்டத்தை சேர்ந்தது.
முதல்
குடிப்பெயர்வானது தென்மேற்கு இரான் பகுதியில் உள்ள
ஜக்ரோஸிலிருந்து நடந்திருக்கிறது. அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு
விவசாயிகளாகவும், ஆடு
மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள்.
இந்த
குடிபெயர்வானது 7000 மற்றும்
3000 ஆண்டுகளுக்கு
(இயேசு பிறப்பதற்கு முன்பு) இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது.
இரண்டாவது
குடிபெயர்வு கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அதாவது ஆரியர்கள் வந்திருக்கிறார்கள். இது
இன்றைய கஜகஸ்தான் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என அனுமானிக்கிறார்கள்.
பலியிடும் பழக்கத்தையும், வேத
பண்பாட்டையும் உருவாக்கியது அவர்களே.
ஆரியர்கள்
பிற்காலத்த்தில் பிராமணர்கள் என்று கூறிக்கொண்டார்கள்.
மேலும் அவர்கள்
கூறிக்கொண்டது
ஆரியர்கள்
வெளியிலிருந்து குடிபெயரவில்லை என்கிறார்கள்.
பல்வேறுதரப்பட்ட
மக்கள் குழு கலப்பது தங்களின் இன தூய்மைக்கு ஊறு விளைப்பதாக கருதுகிறார்கள்.
ஆரியர்கள்
வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதற்கு மற்றொரு காரணம், அவர்கள்
வெளியிலிருந்து வந்தவர்கள் என்று கூறும் முகலாயர்கள் போல அவர்களும் வெளியிலிருந்து
வந்தவர்கள் என்பது போலாகிவிடும் என்பதுதான்.
பத்தொன்பதாம்
நூற்றாண்டில் மத்திய ஐரோப்பாவை சேர்ந்த இனவரவியலாளர்கள் மற்றும் ஹிட்லர், ஆரிய இனம்
மேலான இனம் என்று கருதினார்கள். நார்டிக் மரபை சேர்ந்த இனம் அது என்றார்கள்.
திராவிடர்
திராவிடரினை எளிமையான முறையில்
விளக்குவதாயின் ஆரியர் அல்லாதோர். இன்று குறிப்பிட்ட பகுதியில் வாழ்வோரை ;(தென்னிந்தியர்),
குறிப்பிட்ட
மொழி பேசுபவர்களை (தமிழ், மலையாளம் போன்ற தென் திராவிட
மொழிகளுடன் வடக்கேயும் பழங்குடிகளிடம் சில திராவிட மொழிகள்);
எனப்
பல்வேறு வழிகளில் திராவிடர் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள்.
உண்மையில் `தமிழ்`
என்ற
சொல்லுக்கான திசைச் சொல்லே `திராவிடம்`
{தமிழ்=
இயற்சொல்=Endonym . திராவிடம்= திசைச்சொல்= Exonym}.
இதோ
பாவாணர் குறிப்பிடுகிறார்: "இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும்,
அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில்
‘திராவிடம்'
என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே” [சான்று: ஒப்பியன் மொழி நூல், p15].
`தமிழ்`
என்று
சொல்ல முடியாத பிற மொழியிலாளர்கள் திராவிட, தம்மிரிக,
திரமிள
எனப் பல்வேறு சொற்களில் அழைத்திருந்தார்கள். அவற்றினை எல்லாம் பொதுமைப்படுத்திய
ஒரு திசைச் சொல்லே `திராவிடம்` {Dravida } எனலாம். பவுத்த நூல் ஒன்று Lalitavistara ( (translated into Chinese in 308 CE) தமிழ் எழுத்துகளை `திராவிட லிபி` ( Dravidalipi ) என அழைக்கின்றது. சமயவங்கா ("Samavayanga
Sutta" )என்றொரு சமண நூல் கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்தது. அந் நூலில்
அக்காலத்தில் வழக்கில் இருந்த 18 மொழிகளின் பட்டியலில்
சமசுக்கிருதம் குறிப்பிடப்படவில்லை. `தாமிலி``தமிழி`
( Damilli ) ஒரு எழுத்து வடிவமாகக் குறிப்பிடப்படுகின்றது. இதனால் கமில் சுவெலபில்
( Kamil
Zvelebil ) என்ற அறிஞர் `தமிழ்` என்ற சொல்லைக் குறிக்கும் ஒத்த
சொற்களாக `தமிழி `, `திராவிடம்` என்பவற்றைக் குறிப்பிடுகின்றார். சிங்களத்தில் `திராவிட பாஷா`
எனத்
தமிழ் மொழியினை அழைப்பார்கள். எனவே `திராவிடர்`
என்பது
தமிழரையே ஆதி காலத்தில் முற்று முழுதாகக் குறித்தது. இன்று தமிழர் உட்பட
மலையாளிகள், தெலுங்கர், கன்னடர் போன்ற பிற திராவிட
மொழியினர் எல்லோரையும் குறிப்பிட்டாலும்.
பிராமணர்கள்
இந்தியாவில் ஜாதியை
உருவாக்கியதே பிராமணர்கள் தான்.
வேதம் படித்தவனே
உயர்ந்தவன் மற்றவர்கள் அனைவரும் அவர்களுக்கு கீழே என்று சூழ்ச்சியால் செய்து
காட்டியவர்கள் தான் பிராமணர்கள்.
தொழிலின் அடிப்படையில்
ஜாதியை வைத்து மக்களை பிரித்தனர்.
ஆரியர்களுக்கு முந்தய
காலகட்டத்தில் மக்கள் இயற்கையை கடவுளாக வழிபட்டனர். அவர்களுக்கு தெரிந்த
கடவுளர்கள் அழிவை உண்டாக்கும் தீ, நீர் ஆகியவையே.
அதன் பிறகு மக்கள் தனது
முன்னோர்களை கடவுளாக வழிபட்டனர். அதுவே குலதெய்வ வழிபாடாக மாறியது. பல தலைமுறைகள்
கடக்க முன்னோர்களை குலதெய்வமாக வழிபட்டனர்.
ஆரியர்களுக்கு முந்தய
காலகட்டத்தில் இந்து மதம் என்று ஒன்று இல்லை, சொல்லப்போனால் மதம் என்று ஒன்றும் இல்லை.
மக்களை பிரிப்பதற்காக
ஆரியர்கள் உருவாக்கிய கடவுளர்கள் தான் சிவன், விஷ்ணு, பிரம்மா மற்றும் பலர் ஆவார்கள்.
தொடர்வேன்.....
கருத்துகள் இல்லை