இலங்கையின் செம்மணி -II
இலங்கையின் செம்மணி -II
கொடூர
காட்சிகள் 2025ம் ஆண்டு, பிப்ரவரியில்
கொக்குவில் பகுதியில் தொடங்கியுள்ள புதிய அகழ்வாய்வுப் பணிகள், தடயவியல்
நிபுணர்களுக்கும் பொதுமக்களுக்கும் கடும் மன உளைச்சலைத் தரும் காட்சிகளை
முன்வைக்கின்றன. கண்டெடுக்கப்பட்ட 65க்கும்
மேற்பட்ட எலும்புக்கூடுகளில், குறைந்தது
மூன்று குழந்தைகளின் எலும்புகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாயும்
குழந்தையும் கட்டிப்பிடித்தபடி உள்ள எலும்புக் கூடு நெஞ்சை உருக்கிப்போட்டது. ஒரு
குழந்தையின் எலும்புக்கூட்டுடன், பச்சை
நிறப் பாடசாலைப் பை ஒன்றும், கழுத்தில்
கட்டப்பட்டிருந்த தாயத்து ஒன்றும்,
சில விளையாட்டுப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டபோது, அகழ்வுப் பணியில்
ஈடுபட்டிருந்தவர்கள், மற்றும்
அங்கிருந்த உறவினர்களும் கண்ணீர் சிந்தினர்.
எலும்புகளை
துளைத்த துப்பாக்கி குண்டுகள் இத்தகைய தடயங்கள், இங்கு புதைக்கப்பட்டவர்கள் கொடூரமான முறையில்
கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் என்பதைத் தெளிவாக நிரூபிக்கின்றன. தடயவியல்
நிபுணர்களின் கருத்துப்படி, சில
எலும்புக்கூடுகளில் துப்பாக்கிக் குண்டுத் துளைத்ததற்கான அடையாளங்களும், சித்திரவதை
செய்யப்பட்டதற்கான தடயங்களும் காணப்படுகின்றன.
அதாவது
எலும்புகள் உடைக்கப்படும் அளவுக்கு கொடுமைப்படுத்தி கடும் ரண வேதனையை உருவாக்கி
பிறகு கொலை செய்துள்ளனர் கொடூரர்கள். பல உடல்கள் அவசர அவசரமாக, சடலத்திற்கு கொடுக்க
வேண்டிய குறைந்தபட்ச மரியாதையின்றி ஒரே குழியில் வீசி எறியப்பட்டிருப்பதையும்
எலும்புக்கூடுகளின் நிலை காட்டுகிறது.
காணாமல்
ஆக்கப்பட்டோரின் உறவினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வக்கீல்கள், இந்த அகழ்வாய்வு
நடைபெறும் ஒவ்வொரு நொடியையும் ஆவணப்படுத்தி வருகின்றனர். அவர்கள் கூறுகையில்,
"இந்த அகழ்வாய்வு
வெறும் எலும்புகளைக் கண்டுபிடிப்பதற்கானது அல்ல. இது, திட்டமிட்ட
இனப்படுகொலையின் சான்றுகளைத் திரட்டும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணி.
ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு
எலும்பும் ஒரு கதையைச் சொல்கிறது. அந்த உண்மைகளை அழித்துவிடவோ, சிதைத்துவிடவோ நாங்கள்
அனுமதிக்க மாட்டோம்," என்கின்றனர்.
எல்லா
தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழதேசத்தில்
மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன.
இலங்கையின்
செம்மணி - சித்துபாத்தி பகுதியில் மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டு அகழாய்வுப்
பணிகள் நடந்து வருகின்றன. இந்த மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 82 பேரின் மனித
எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அகழாய்வில் புத்தகப்
பையுடன் அடையாளம் காணப்பட்ட குழந்தை ஒன்றின் எலும்புக்கூடும் தோண்டி
எடுக்கப்பட்டுள்ளது நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
இந்த
எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிய காலணி மற்றும்
குழந்தைகள் விளையாடும் பொம்மை கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர வைத்து இருக்கிறது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் எலும்புக்கூடுகள்
மீட்கப்பட்டு வருவது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இலங்கை வரலாற்றில்
செம்மணி மட்டும் மனித புதைகுழி அல்ல.. புதைகுழி என்றால் மனிதர்களை கொத்துக்கொத்தாக
புதைத்து வைத்து இருப்பார்கள். கிட்டத்தட்ட 20
புதைகுழிகள் இதுவரை இலங்கையில் அடையாளம்
காணப்பட்டுள்ளது.
எல்லா
தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழதேசத்தில் மட்டும்தான்
எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன. இப்போது அந்தப் பிணங்கள் காலத்தின்
கறையான் அரித்து எலும்புக் கூடுகளாய் மாறி ஈழத்தில் நிகழ்ந்து இனப்படுகொலைதான்
என்பதை அடையாளம் காட்டுகிறது. செம்மணி மனிதப் புதைகுழியானது தமிழினப் படுகொலையின்
சாட்சியாகும்.
இனப்
படுகொலைக்கு செம்மணிதான் சாட்சி. இதற்கு முன்னால் எத்தனையோ இனப்படுகொலை
சாட்சிகளைப் பன்னாட்டு அவையில் முன்னிறுத்தினோம். ஆனால் நீதிக்கு இடம் தராத ஐ.நா
அவைகள் கள்ள மெளனம் காத்தது. இந்த செம்மணி அகழாய்வு உண்மையிலாவது, இனப் படுகொலையின்
இன்னல்களை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ளட்டும்.
செம்மணி
மனிதப் புதைக் குழி 2009 ஆம்
ஆண்டிற்கு முன் நிகழ்ந்திருக்கிலாம். அல்லது பின் நிகழ்ந்திருக்கலாம். எப்போது
நடந்தாலும், சிங்களவரால்
நிகழ்த்தப்பட்டது. இனப்படுகொலைதான் என்பதற்கு செம்மணியும் மற்ற அகழாய்வுகளும்
வெளிப்படுத்தியிருக்கிறது.
2009 க்கு பின்னும்
கூடுதலாய் அதே புதைகுழி உத்தியை சிங்கள பேரினவாத அரசு கையாண்டுள்ளது என்பதை
இப்போது கூடுதலாய் வெளிப்பட்டிருக்கிறது. சமகாலத்தில் செம்மணியை விட சர்வதேச
சமூகத்திற்கு வேறென்ன சான்று வேண்டும்.
இதுவரை 80 க்கும் மேற்பட்ட
அகழ்வாய்வு தொகுப்புகள் கிடைத்துள்ளன. எந்த நாட்டிலும் இதுபோல், அகழாய்வில்
அதிர்ச்சியில்லை. தமிழர் அகழாய்வில் முன்னோர் வாழ்வியல் படித்துள்ளோம். ஆனால், தமிழீழ தேசத்தில்தான்
எலும்புக் கூடுகளின் வலியை உணர முடிகிறது.
தாயும், குழந்தையும் கட்டி
அணைத்தபடி மடிந்த எலும்புக் கூடுகளின் காட்சி,
காலம் கடந்தும் நம் காயங்களை.. மீண்டும்
காயப்படுத்துகிறது.. பள்ளிச்சிறுவர்களின்,
புத்தகப் பை,
பொம்மையோடு கண்டறிந்த அகழாய்வு. கொடுமையின்
உச்சத்தை தொடுகிறது. எண்ணிலடங்கா எலும்புக் கூடுகளில் சிறுவர் சிறுமியர் அதிகம்
என்பதை உலகம் கண்டுணரா அதிர்ச்சி.
வதைக்கப்பட்டும், புதைக்கபட்டும், வல்லுறவில்
மறைக்கப்பட்டும் எத்தனைப் பெண்கள். அத்தனையும் செம்மணியில் எலும்புக்கூட்டின்
சாட்சியங்கள். இன்னும் இலங்கை அகழாய்வு நீண்டாலும் கள்ள மெளனம் சாதிக்கும்
இவ்வுலகம். நாம் சிங்கள பெளத்த பேரினத்தின் அநீதிகளை பன்னாட்டு அவையில்
எடுத்துரைப்போம். மக்கள் திரள் போராட்டம் வழியாய் நமக்கான நீதிக்குக் குரல்
கொடுப்போம்.
ஒன்றிய
அரசு, அண்டை நாட்டில்
நிகழ்ந்த அநீதிக்கு ஐ.நா அவைவில் குரல் கொடுக்க வேண்டும்!! இதற்கு முன்
தமிழினத்திற்கு செய்ததை, செம்மணியை
மனிதப் புதை குழி அறிந்தும் கண்டும் காணமல் இருக்கக் கூடாது.
தமிழீழ
விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இருந்து யாழ்ப்பாணம் 1995 ஆம் ஆண்டுவாக்கில்
மீட்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம்
பகுதியில் காணாமல் போனதாக கூறப்படுபவர்கள் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக
தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
சித்துப்பாத்தியில்
கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும்
என்பது அனைவரதும் ஆணித்தரமான கருத்து. ஏனெனில் அந்தப் பகுதியானது யுத்த காலப்
பகுதியில் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும்
அந்த மயானத்தில் கடந்த காலத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டனவே தவிர
புதைக்கப்படுவதில்லை.
பள்ளி
செல்கின்ற சிறுவன் ஒருவன் புத்தகப் பையுடன் புதைக்கப்பட்டிருக்கிறான். இவை
அனைத்தும் மிகவும் மோசமான மனிதாபிமானம் அற்ற செயலாகவே உள்ளது.
சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
இதனைப்
பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும்,
கோரமாகவும்,
அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது.
இதனை செய்தவர்களிடமே நீதியை கேட்டால் அது கிடைக்காது. அதனால் சர்வதேச
நீதிமன்றத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு செல்ல வேண்டும்.
கருத்துகள் இல்லை