கடவுள் (God)

இல்லாத கடவுளை எப்படி ஒழிப்பது?

இருப்பதாக மக்கள் நம்பிக் கொண்டு இருக்கிறார்களே!

ஏன் நம்புகிறார்கள்?

கடவுள்தான் கஷ்டங்களை தீர்க்க முடியும் என முட்டாள் தனமாக நினைக்கிறார்கள்!

சரிதான்! இதை எப்படி தீர்ப்பது?

இந்த முட்டாள்தனத்துக்கு எதிராக பகுத்தறிவு பிரச்சாரத்தை செய்ய வேண்டும்.

என்ன பகுத்தறிவு பிரச்சாரம்?

கடவுள் என்பது இல்லை! அப்படி ஒரு பொருளே இல்லை! மதவாதிகள் நம்மை ஏமாற்றுவதற்காக செய்கிற வேலைகள் கதைகள் இது! என்று பகுத்தறிவு பிரச்சாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்தாலும் பெருவாரியான மக்கள் கடவுளைத் தேடுவது ஏன்?

பல வேண்டுதல்கள் அவர்களுக்கு உள்ளது. அதை எப்படியாவது கடவுளை நம்புவதன் மூலம் பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள்!

உண்மைதான்! நடைமுறை வாழ்க்கையில் நிறைவேறாத பல வேண்டுதல்கள்தான் நியாயமான வாழ்க்கை தேவைகள்தான் அவர்களை கடவுளின் பக்கம் தள்ளி விடுகிறது. மக்களின் இந்த நியாயமான தேவைகளை மறுத்து நிற்பது எதுவோ! அதை மாற்றாமல் அந்த அடிப்படைக்கு எதிரான நடைமுறை வழிகாட்டலோடு மக்களை இணைக்காமல் இந்தக் கடவுளை நாம் வெல்ல முடியாது.

ஆனாலும் பாருங்கள்! பல பகுத்தறிவுக்கு! இல்லாத கடவுளோடு சண்டை போடுவது

ஒரு வீர விளையாட்டு!

தனக்கு மட்டுமே அறிவு வளர்ந்து விட்டதாக ஒரு கித்தாப்பும் கூட!

இருந்து கொடுமைப்படுத்துகிற முதலாளித்து அமைப்பு முறைக்கு எதிராக சண்டை செய்ய மட்டும் பல பகுத்தறிவுகள்! கடவுளைப் போலவே காணாத விசயமாகி விடுகின்றன.

அதனால்தான் சொல்கிறோம் வர்க்கப் போராட்டத்தோடு இணைக்கப்படாத பகுத்தறிவால் ஒருபோதும் கடவுளை ஒழிக்க முடியாது. மறுக்க மட்டும்தான் முடியும்.

கடவுளை, கடவுள் எனும் கருத்தை

அதன் இயல்புத் தன்மைக்கு ஏற்றவாறு கண்டு கொள்ளாமல் மக்கள் விட்டுவிட வேண்டும் 


கருத்துகள் இல்லை